கொழும்பு குணசிங்கபுர முஹந்திரம் ஒழுங்கை (மிஹிந்து மாவத்தை பின்புறம்) பகுதி சற்றுமுன்னர் மூடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் தப்பிவந்து இந்தப் பகுதியில் இருந்ததாகவும் அவருடன் பழகியிருந்த இருவர் இந்தப் பகுதியில் இருந்து சுகாதார பிரிவினரால் அழைத்துச் செல்லப்பட்டதையடுத்து இந்தப்பகுதி மூடப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.