web log free
December 22, 2024

மாகாண மட்டங்களில் ஊரடங்கு இரத்து

நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம், ஆறு மாவட்டங்களை தவிர்த்து, ஏனைய 19 மாவட்டங்களிலும் நாளை (16) காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு, மாலை 4 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.

ஏனைய மாவட்டங்களில், அந்தந்த சுகாதார பிரிவினரின் ஆலோசனைகள், பரிந்துரைகளுக்கு அமைவாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தல் மற்றும் தளர்த்தல் தொடர்பில் தீர்மானம் எட்டப்படும்.

இதேவேளை, அன்றாடம் வேலைக்குச் சென்று அன்றைய நாளை, கடத்துவோர் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

ஆகையால், மாகாண ரீதியி்ல ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவதற்கு அல்லது முற்றாக நீக்கிவிடுவது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்திவருவதாக அறியமுடிகின்றது.

அதற்கான அறிவிப்பு, நாளை (16) வெளியிடப்படும் என்று அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கொரோனா வைரஸ் பரவி வருவதையடுத்து, அதிக அவதானமிக்க பகுதிகளான கொழும்பு, கம்பஹா, களுத்றை, புத்தளம், கண்டி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களை தவிர ஏனைய மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நாளை (16) காலை 6.00 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.

குறித்த பகுதிகளுக்கு பி.ப 4.00 மணிக்கு மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஊரடங்கு நீக்கப்படும் காலப்பகுதியில், அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

Last modified on Wednesday, 15 April 2020 12:28
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd