தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அழைத்து செல்லப்பட்டவர்களை ஏற்றிச் சென்ற இரண்டு பஸ்களும் லொறியொன்றும் விபத்துக்குள்ளானதில், ஒருவர் பலியாகியுள்ளார் மேலும் 29 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வறக்காபொலையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
வறக்காபொலைக்கு மரக்கறிகளை ஏற்றிவந்த லொறியுடனனேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. திருகோணமலையிலுள்ள மத்திய முகாமுக்கே, கடற்படைக்கு சொந்தமான பஸ்ஸில் அவர்கள் ஏற்றிச்செல்லப்பட்டனர்.