web log free
December 22, 2024

தேசிய வைத்தியசாலையில் கொரோனா நோயாளி

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 238 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சின் புள்ளிவிபரவியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

குறித்த வைரஸ் தொற்றுக்குள்ளான 5 பேர் நேற்று (15) அடையாளம் காணப்பட்டனர் என்று  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 5 பேரில் நால்வர் தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்தவர்கள் என்பதுடன், ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவருக்கே கொரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 

Last modified on Thursday, 16 April 2020 02:40
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd