தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அழைத்து செல்லப்பட்ட பஸ்கள் இரண்டும், மரக்கறி ஏற்றிவந்த லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
வறக்காபொலையில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஒருவர் மரணமடைந்தார். மேலும் 29ஆம் பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவ்விரு பஸ்களிலும் 100 பேர் ஏற்றிச்செல்லப்பட்டனர்.
விபத்தின் போது பஸ்களிலிருந்த மூவர் தப்பியோடி தலைமறைவாகிவிட்டனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்களை தேடி வலைவிரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.