நாடளாவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை, 21 மாவட்டங்களுக்கு தளரத்துவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்திவருகின்றது.
கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களான கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டத்தை தொடர்ந்து அமுல்படுத்துவதற்கும், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் தளர்த்துவதற்கும் அரசாங்கம் கலந்தாலோசித்து வருவதாக அறியமுடிகின்றது.
கொழும்பு, கம்பஹா,களுத்துறை ஆகிய மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கிய மேல் மாகாணத்துக்கு மார்ச் 20ஆம் திகதி மாலை 6 மணிக்கு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம், ஒரேயொரு தடவை மட்டுமே தளர்த்தப்பட்டது. அதன்பின்னர் மீண்டும் அறிவிக்கப்படும் வரையிலும் ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களையும் இணைத்து, கடும் எச்சரிக்கை கொண்ட மாவட்டங்களாக பிரகடனப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.