தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டோரில், 9 வயது சிறுமிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, புத்தளம் பொதுச் சுகாதாரப்ப பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தொற்றுக்குள்ளான குறித்த சிறுமி அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.
அல்காசிமி குடியிருப்பு தொகுதியில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட சிறுமிக்கே இவ்வாறு கொரோனா தொற்றியுள்ளது.
குறித்த பகுதியில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளருடன், மன்னார் தாராபுரம் பகுதிக்கு மரண சடங்கில் பங்கேற்க சென்றவர்களில் அந்த சிறுமியும் அடங்கியிருந்ததாக தெரியவந்துள்ளது.