பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான சேவைகளை நடத்துவதற்கு ஏற்ற வகையில் 1.95 பில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி செய்வதற்கான திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பலாலி விமான நிலையத்தை 1965 மில்லியன் ரூபாய் செலவில், அபிவிருத்தி செய்யும் திட்டம் ஒன்றுக்கு கடந்த ஆண்டு ஒக்டோபர் 23ஆம் திகதி, அமைச்சரவை அனுமதி அளித்திருந்தது.
இந்த நிலையில், அரசியல் குழப்பங்களுக்குப் பின்னர், அமைச்சரவையில் பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கான புதிய அமைச்சரவைப் பத்திரம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 100 பயணிகளை ஏற்றக் கூடிய விமானங்கள் வந்து செல்வதற்கு ஏற்றவகையில் பலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படும் என கூறப்படுகின்றது.