ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு பின்னர், கடுமையான சட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை எடுத்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதில், பொது போக்குவரத்துகளான ரயில்கள், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள், தனியார் பஸ்களுக்குள்ளும் வெளியியேயும், ரயில் நிலையங்கள் மற்றும் பஸ் தரப்பிடங்களில் எச்சில் துப்புவோருக்கு கடுமையான தண்டனையை வழங்குவதற்கு சுகாதார அமைச்சு பரிந்துரைத்துள்ளது.
இதேவேளை, ஏப்ரல் 20ஆம் திகதியின் பின்னர், 5,000 அரச பேருந்துகள், 400 ரயில்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.