சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பகுதி இன்று (18) மாலை வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை, 248 ஆக அதிகரித்துள்ளது.
இன்றைய தினம் (2020.04.18) இதுவரையில் கொரோனா வைரசு தொற்றினால் பாதிக்கப்பட்டு உறுதிசெய்யப்பட்ட நோயாளர்கள் 4 பேர் பதிவாகியிருப்பதாக
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க உறுதிசெய்தார்.
இதற்கமைவாக இதுவரையில் இலங்கையில் பதிவான மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 248 ஆகும். இன்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 4 நோயாளர்களில் மூவர் ஒலுவில்
தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருந்த நபர்களாவதுடன் மற்ற நோயாளி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.