web log free
September 07, 2025

அறிவில்லாது கூறவேண்டாம் மனோவுக்கு பதிலடி

சுகாதாரத் துறை அல்லது தொற்றுநோய்கள் குறித்து அறிவு இல்லாதவர்கள் கொரோனா வைரஸ் குறித்து அறிக்கைகளை வெளியிடக்கூடாது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொடர்பான அரசாங்கத்தின் புள்ளிவிபரங்கள் துல்லியமானவை அல்ல என தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்திருந்தார்.

அத்துடன், கொரோனா வைரஸ் பரிசோதனைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை எனவும் குற்றம் சுமத்தியிருநு்தார்.

இதற்கு பதிலளித்து பேசியுள்ள காதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசியுள்ள அவர்,

“உண்மையான மற்றும் புள்ளிவிபரங்கள் இல்லாமல் தொற்றுநோயியல் வல்லுநர்கள் ஒரு தொற்றுநோயைப் பற்றி வெற்றிகரமாக ஆய்வு செய்ய முடியாது.

உண்மைகளை மறைப்பதன் மூலம் மக்களை உள்ளடக்கிய ஒரு சுகாதார செயல்முறை வெற்றிபெற முடியாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும் அதன் வீரியம் இதுவரை தணியவில்லை என வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமையில் இந்த வைரஸ் சமூகத்தில் பரவலடையாத நிலைமை காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Last modified on Sunday, 19 April 2020 01:08
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd