கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நீதிமன்ற நடவடிக்கைகள் யாவும், நாளை (20) முதல் மீண்டும் ஆரம்பமாகும்.
நீதிமன்ற ஆணைக்குழுவினால் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேல் நீதிமன்றங்கள், சில் மேன்முறையீட்டு நீதிமன்றங்கள், வர்த்தக நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்கள், தொழிலாளர் நியதி சபை ஆகியன நாளை (20) திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.