ஒத்திவைக்கப்பட்டுள்ள பொதுத் தேர்தலை எப்போது நடத்துவது என்பது தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று (20) பிற்பகல் முக்கிய பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.
சுகாதார பிரிவினர், பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்டோர் உட்பட சகல கட்சிகளின் செயலாளர்கள் அல்லது பிரதிநிதிகள் அடங்களாக இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
இதன்போது, பொதுத் தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எட்டப்படவுள்ளது.
பகுதி பகுதியாகவா அல்லது ஒரே நாளிலா தேர்தலை நடத்துவது என்பது குறித்து இறுதித் தீர்மானம் எட்டப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும் மே மாதம் இறுதியில் தேர்தல் நடத்துவதற்கான சாத்தியகூறுகள் உள்ளன.