சட்டமா அதிபர் திணைக்களத்தில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதை அடுத்து, சட்டமா அதிபர் திணைக்களம் மறு அறிவித்தல் வரையிலும் மூடப்பட்டுள்ளது.
இதேவேளை, சட்டமா அதிபர் திணைக்களத்தை சுத்தப்படுத்தும் வேளைகளை முன்னெடுக்குமாறு, அரச சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பின்னர், ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டமையால், நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் முற்றாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.
நீதிமன்ற நடவடிக்கைகள் இன்று (20) ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையிலே இவ்வாறு, சட்டமா அதிபர் திணைக்களத்தின் நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.