முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர, குற்றப்புலனாய்வு பிரிவுக்கு (சி.ஐ.டி) அழைக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் மன்னாரிலிருந்து புத்தளத்துக்கு வாக்காளர்களை கொண்டுவருவதற்காக, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 225 பஸ்களை பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் அவரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்கே, இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.
புதன்கிழமை (22) அழைக்கப்பட்டுள்ளார். அரச சொத்துகளை முறைகேடாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழே, இவ்வாறு வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனிடமும் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.