உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாத குண்டுத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்து, அனைத்து பள்ளிவாசல்களிலும் இன்று (21) விசேட பிரார்த்தனை நடத்துமாறு, முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
காலை 8 .40 முதல் 8.55 வரை பள்ளிவாசல்களில் இந்த பிரார்த்தனை நடைபெறவுள்ளதாக, முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பி.எம்.அஷ்ரப் தெரிவித்துள்ளார்.
2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலினால் ஏற்பட்ட வடுக்கள் இலங்கையர்கள் அனைவரது உள்ளங்களிலும் இன்னும் ஆறாமல் இருப்பதாக, அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.