21 வருடங்களின் பின்னர் அமெரிக்க மசகு எண்ணை சந்தையில் நேற்றைய தினம் மசகு எண்ணை விலை வீழ்ச்சி அடைந்து காணப்பட்டது.
அதன்படி அமெரிக்க சந்தையில் மசகு எண்ணை ஒரு பீப்பாயின் விலை 15.65 அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது.
இது 1999 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஏற்பட்ட வீழ்ச்சியாகும்.
கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக மசகு எண்ணைக்கு ஏற்பட்ட கேள்வி குறைந்தமையே இதற்கு பிரதான காரணமாகும்.
ஐரோப்பா உள்ளிட்ட உலகின் ஏனைய நாடுகளில் பயன்படுத்தப்படும் பிரேன்ட் எண்ணை ஒரு பீப்பாயின் விலை 27.87 அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது.