சில்லறை விலைக்கு மீன்களை கொள்வனவு செய்யும் நோக்கில் பெலியகொட மத்திய மீன் விற்பனை நிலையத்திற்கு வர வேண்டாம் என மீன்வள மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சு நுகர்வோரை கேட்டுள்ளது.
பெலியகொட மத்திய மீன் விற்பனை நிலையத்தின் சில்லறை விற்பனை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மீன்வள மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் மக்கள் ஒன்று கூடுவதை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.