ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் இதுவரையிலும் 119 பேர் கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுளள்ன.
இவர்களில், 40 பேர் தடுத்துவைத்து விசாரணைக்கும் உத்தரவின் கீழ், விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அதிகாரி ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.
இதேவேளை, பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பொறுப்பின் கீழ், 78 பேர் உள்ளனர். அதில் 52 பேர் தடுத்துவைக்கும் கட்டளையின் கீழ் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில், குற்றப்புலனாய்வு பிரிவைச் சேர்ந்த 11 குழுக்களும் பயங்கரவாத புலனாய்வு விசாரணை பிரிவின் மூன்று குழுக்களும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.