இலங்கையிலுள்ள சலூன்கள் மற்றும் அழகுக் கலை நிலையங்களை மறுஅறிவித்தல் விடுக்கப்படும் வரை மூடுமாறு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
நாட்டின் சில பகுதிகளில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், மக்கள் அதிகளவில் நடமாடுவது தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என அவர் இதன்போது கூறியுள்ளார்.
தாம் இதுவரை கொரோனா வைரஸை முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவில்லை என கூறியுள்ள சுகாதார பணிப்பாளர் நாயகம், பொதுமக்கள் தொடர்ந்தும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் சிறந்த சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதுமாத்திரமன்றி, நாடு பூராகவும் வைத்தியசாலைகளை அண்மித்துள்ள சிறிய உணவகங்களை மறுஅறிவித்தல் விடுக்கப்படும் வரை மூடுமாறும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், அனைத்து விதமான உணவகங்களும் சுகாதார நடைமுறைகளை பேணுவதுடன், சுத்தமான சேவையை வழங்குமாறும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வாடிக்கையாளர்களுக்கு தமது உணவகங்களில் உணவு உட்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதை விடவும், அவர்களுக்கு உணவு எடுத்து செல்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்குமாறு சுகாதார பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க