ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில், எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவோர் தங்களுடைய விருப்பு இலக்கத்தை பயன்படுத்தக் கூடாது, கட்சியின் சின்னமான யானை சின்னத்தை மட்டுமே பயன்படுத்தி, பிரசாரங்களை முன்னெடுக்கவேண்டும் என்று கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.
கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே மேற்கண்டவாறு ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.