பொலன்னறுவை மாவட்டத்தின் லங்காபுர பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட, 12 கிராமங்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொவிட் 19 தொற்றுக்குள்ளான ஒருவர் குறித்த பகுதியில் இனங்காணப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மீள் அறிவித்தல் வழங்கப்படும் வரை குறித்த கிராமங்களுக்குள் பிரவேசிப்பதற்கும் அங்கிருந்து வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெலிசர கடற்படை முகாமில் கடமையாற்றும் கடற்படை சிப்பாய்க்கு, கொரோனா தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டதை அடுத்தே, அவர் சென்று வந்த, பொலன்னறுவை லங்காபுர, பிரதேசம் முழுமையாக மூடப்பட்டது