கொழும்பு வாழைத்தோட்ட பகுதியிலுள்ள வீடுகளுக்கு அருகில் உள்ளவர்களுக்கு தீவிரமாக கொரோனா வைரஸ் தாக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் அங்குள்ளவர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய தினம் கொழும்பு நகர எல்லையின் பல இடங்களில் மேலும் சில கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து கொழும்பு பிரதான சுகாதார வைத்திய அதிகாரியுடன் இணைந்து கலந்துரையாடல் மேற்கொண்டு இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கொழும்பு நகர சபையில் சேவை செய்வதற்காக கொழும்பின் பல்வேறு நகரங்களில் இருந்து வரும் நபர்களை குறித்த PCR பரிசோதனைக்கு உட்படுத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.