கொவிட்-19 என்றழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு நாடு முகம் கொடுத்துகொண்டிருக்கும் நிலையில், பாராளுமன்றத்தை நான் பலவந்தமாக கூட்டவுள்ளதாக வதந்திகள் பரப்பப்படுகின்றன என்று சபாநாயகர் கருஜயசூரிய, டுவிற்றரில் பதிவிட்டுள்ளார்.
மீண்டுமொரு அரசியலமைப்பு நெருக்கடியை தோற்றுவிப்பதற்கு நான் விரும்பவில்லை. பலவந்தமாக பாராளுமன்றத்தை கூட்டுவேன் எனும் வதந்திகள் தவறானவை.
ஒரு நெருக்கடியை தவிர்ப்பதற்கான சகல முயற்சிகளும் நிறைவேற்று அதிகார தரப்பால் முன்னெடுக்கப்படவேண்டும்.
ஒரு சர்ச்சை வருமாயின் நீதித்துறையின் முடிவை ஆதரிக்கும் நிலையில் நான் இருக்கின்றேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.