web log free
February 05, 2025

கொரோனா சிப்பாய் 7 வாகனங்களில் பயணம்

கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் என இனங்காணப்பட்ட கடற்படை சிப்பாய், பயணம் செய்த விவரம் வெளியாகியுள்ளது.

எனினும், வெலிசர கடற்படை முகாமிலிருந்து கொழும்பு, கோட்டை பஸ் நிலையத்துக்கு எந்த வாகனத்தில் வந்திறங்கினார் என்பது தொடர்பிலான விவரம் வெளியாகவில்லை.

அவர், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ், ஓட்டோ, மரக்கறி, அரிசி லொறிகளில் பயணித்துள்ள அவர், சில தூரம் நடந்தும் சென்றுள்ளார்.

அவர் பயணித்த பாதையும் வாகனங்களும்

1.கொழும்பிலிருந்து கண்டிக்கு பயணித்த இ.போ.ச பஸ்ஸில் ஏறி, வறக்காபொலையில் இறங்கியுள்ளார்.

2. வறக்காபொலையிலிருந்து அலவ்வ வரைக்கும் ஓட்டோவில் பயணித்துள்ளார்.

3.அலவ்வயிலிருந்து குருணாகல் வரைக்கும் இராணுவ வண்டியில் பயணித்துள்ளார்.

4.குருணாகல்லிலிருந்து தம்புள்ளை வரைக்கும் மரக்கறி லொறியில் பயணித்துள்ள அவர் அதன்பின்னர் அரிசி லொறியிலும் பயணித்துள்ளார்.

5. அதன்பின்னர், அரிசி லொறியில் தம்புள்ளையிலிருந்து மின்னேரியா வரைக்கும் பயணித்துள்ளார். 

6. மின்னேரியாவிலிருந்து ஹிங்குராங்கொடைக்கு நடந்தே சென்றுள்ள அவர், அங்கிருந்து தனது வீட்டுக்கு ஓடோவொன்றை வாடகைக்கு அமர்த்தி சென்றுள்ளார். 

இதற்கிடையில், அவருடன் யாராவது தொடர்பு ஏற்படுத்தியிருந்தார்களா என்பது தொடர்பிலான தகவல்கள் வெளியாகவில்லை

Last modified on Thursday, 23 April 2020 13:33
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd