ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக கண்டனத்தீ்ர்மானத்தை பாராளுமன்றத்தில் கொண்டுவருவதற்கு தேவையான காரணங்கள் உள்ளன என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
அரசியலமைப்பு மீறி அரசியலமைப்பு எதிராக செயற்பட்டால், ஜனாதிபதிக்கு எதிராக கண்டனத் தீர்மானத்தை கொண்டுவரலாம் என்றார்.
பாராளுமன்றத் தேர்தல் மற்றும் பாராளுமன்றத்தை மீளவும் கூட்டுதல் என்பன தொடர்பில் நடத்தப்பட்ட ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.