web log free
December 22, 2024

65 மணிநேரம் தொடர் ஊரடங்கு

இன்று (24) இரவு 8 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம், தொடர்ந்து 64 மணிநேரத்துக்கு அமுல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், எதிர்வரும் 27ஆம் திகதி திங்கட்கிழமை காலை 5 மணிவரையிலும் நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும்.

மேல் மாகாணம் மற்றும் புத்தளம் ஆகிய் மாவட்டம் உள்ளிட்ட அச்சுறுத்தல் வலயங்களை தவிர, ஏனைய பிரதேசங்களில், கடந்த 20ஆம் திகதியிலிருந்து இன்று (24) இரவு 8 மணிவரையிலும், காலை 5 மணிமுதல் இரவு 8 மணிவரை மட்டுமே ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தது.

இதேவேளை, கொழும்பு,கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களிலிருந்து யாரும் வெளியேறவோ அல்லது உள்நுழைவதற்கோ தடைவிதிக்கப்பட்டுள்ளது.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd