கொவிட்-19 என்றழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தேர்தலை நடத்துவது பெரும் சிக்கலாகவே உள்ளது.
இந்நிலையில், தேர்தலை நடத்துவதற்கான அதிகாரத்தின் பிரகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, எதிர்வரும் ஜூன் மாதம் 20ஆம் திகதியன்று தேர்தலை நடத்துவதற்கான திகதியை குறித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு தேர்தலை நடத்தவேண்டாம் என்றும் மக்களின் பாதுகாப்பே முக்கியமானது என்றும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ மஹிந்த தேசப்பிரியவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.