சகல மாவட்டங்களுக்கு நேற்றிரவு 8 மணியிலிருந்து 27ஆம் திகதி திங்கட்கிழமை காலை 5 மணியளவில் ஊரடங்க சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கும் கேகாலை மாவட்டத்தில் வரக்காபொல பொலிஸ் பிரிவிலும் கண்டியில் அலவத்துகொட பொலிஸ் பிரிவிலும் அம்பாறையில் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலும் அமுல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு சட்டம், எதிர்வரும் 27ஆம் திகதியன்று காலை 5 மணிக்கு தளர்த்தப்படும் என்று பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஏனைய மாவட்டங்களிலும் எதிர்வரும் 27ஆம் திகதி காலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் என்று பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.