வெலிசர கடற்படை முகாமில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் 60 பேர் அடையாளம் காணப்பட்டனர். இலங்கைக் கடற்படையின் பிரதான முகாம் இது. பல பகுதிகளில் இருந்தும் வந்து இங்கு பணியாற்றுகின்றனர். முதலில் அடையாளம் காணப்பட்ட சிப்பாயுடன் பழகிய அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.பி சி ஆர் பரிசோதனையில் மேலும் பலர் அடையாளம் காணப்படக் கூடும்.எம்மால் முடிந்தளவுக்கு சிப்பாய்களை தனிமைப்படுத்தினோம் என்று இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இன்று காலை தெரிவித்தார்.
யார் என்றாலும் முப்படையினர் என்றாலும் நோய்க்கான அறிகுறிகள் இருந்தால் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.அதுவே நியதி. ஜா எல , சுதுவெல்ல பகுதியில் போதைப்பொருள் பாவனையாளர்கள் பலர் கொரோனா தொற்றுடன் தப்பிச் செல்ல முயன்றபோது கடற்படைச் சிப்பாய்கள் அவர்களை பிடிக்க முயன்றனர். சில போதைப்பொருள் பாவனையாளர்கள் மரத்தில் ஏறி இறங்காமல் இருந்து அவர்களை காப்பாற்ற மரத்தில் ஏறி இறங்கும் நிலை கூட சிப்பாய்களுக்கு இருக்கிறது.
எவ்வாறாயினும் இந்த முகாமில் இருந்து விடுமுறையில் வீடுகளுக்கு சென்ற சிப்பாய்கள் திருப்பி அழைக்கப்பட்டுள்ளனர். எனவே யாரும் அச்சப்படத் தேவையில்லை. போதுமானளவு சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன”