ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தல் தொடர்பில், திருத்தப்பட்ட அறிவிப்பொன்றை அரசாங்கம் விடுத்துள்ளது.
அதன்பிரகாரம், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், ஆகிய மாவட்டங்களிலும், கேகாலை மாவட்டத்தில் வறக்காபொல பொலிஸ் பிரிவிலும் கண்டி மாவட்டத்தில் அலவத்துகொட பொலிஸ் பிரிவிலும், எதிர்வரும் 27ஆம் திகதியற்று தளர்த்தப்படுவதாக இருந்தது.
எனினும், அந்த மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்படாது என்றும் மே மாதம் 4ஆம் திகதி வரையிலும் தொடர்ச்சியாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது.
அப்படியாயின் மேலே குறிப்பிட்ட மாவட்டங்கள் மற்றும் பொலிஸ் பிரிவுகளில், தொடர்ச்சியாக இன்னும் 9 நாட்களுக்கு ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும்
ஏனைய மாவட்டங்களில், எதிர்வரும் 27ஆம் திகதி காலை 5 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம், மே மாதம் 1ஆம் திகதி வரையிலும் ஒவ்வொரு நாளும் காலை 5 மணிமுதல் இரவு 8 மணி வரையிலும் தளர்த்தப்படும்.