கொரோனா தொற்றுக்கு உள்ளாகி, தனிமைப்படுத்தல் முகாமில் தங்கவைக்கப்பட்டிருக்கும் சிறுமி, தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
அந்த விவரத்தை அறிந்துகொண்ட, அந்த தனிமைப்படுத்தல் முகாமில் கடமையாற்றும் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்தவர், அச்சிறுமிக்கு கேக் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார்.
பலாலியில் தனிமைப்படுத்தும் முகாமிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிறுமியும் அந்த கேக்கை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டுள்ளார்.
இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது.