கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பிரித்தானியாவில் 25 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து 900 பேர் வரையிலான இலங்கையர்கள் நாடு திரும்ப எதிர்பார்த்துள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து பிரித்தானியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையில்,
“பி.எச்.டி மாணவர்கள், மேலதிக படிப்புக்கு வந்த வைத்தியர்கள், விடுமுறைக்காக பிரித்தானியா வந்தவர்கள், பிரித்தானியாவில் பணிபுரிந்தவர்கள் என பலர் இலங்கைக்கு திரும்புவதற்கு ஆதரவளிக்குமாறு உயர் ஸ்தானிகராலயத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், தங்குமிடம் மற்றும் விடுதிகள் தொடர்பாக எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு விசா நீட்டிப்பதில் உயர்ஸ்தானிகராலயம் தலையிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் லொக்டவுன் காலத்தில் அவற்றைப் பெற வழி இல்லாதவர்களுக்கு உயர் ஸ்தானிகராலயம் உதவிகளை வழங்கும் என்று அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், கொரோனா தொற்று காரணமாக இலங்கையர்களின் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக, அங்கிருக்கும் இலங்கை சமூகத்தின் தகவல்கள் கூறியுள்ளதாக” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.