இலங்கையில் மேலும் 19 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது என அறிவித்துள்ளது சுகாதார அமைச்சு. ஆதலால், கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 649ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, அனுமதிக்க வேண்டிய நோயாளர்களை விடவும் ஆகக் கூடுதலாக 20 நோயாளர்கள், அங்கொட ஆதார வைத்தியசாலையில் (ஐ.டி.எச்) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆகையால் அங்கு ஒருவகையான பரபரப்பு ஏற்பட்டுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 120 பேரை மட்டுமே, வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான ஏற்பாடுகள் அந்த வைத்தியசாலையில் செய்யப்பட்டிருந்தன. எனினும்,தற்போது 140 நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
கொள்ளளவை விடவும் 20 நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.