உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படும் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை விடுதலை செய்யுமாறு தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை எதிர்வரும் 5ஆம் திகதியன்று விசாரணைக்கு உட்படுத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.