web log free
February 17, 2026

ஊரடங்கு எப்போது வரை நீடிக்கும்- பொலிஸ் விளக்கம்

எதிர்வரும் மே மாதம் 31ம் திகதி வரையில் ஊரடங்குச் சட்டத்தை நீடிக்கும் தீர்மானம் எதுவும் இதுவரையில் எடுக்கப்படவில்லை என பொலிஸார் அறிவித்தனர்.

சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதாரப் பிரிவினரின் ஆலோசனை வழிகாட்டல்களுக்கு அமையவே ஊரடங்குச் சட்ட நீடிப்பு குறித்து தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தியாவசிய சேவை வழங்கும் தரப்பினருக்கு இன்றைய தினம் வரையில் வழங்கப்பட்டிருந்த ஊரடங்கு அனுமதிப்பத்திரம் எதிர்வரும் மே மாதம் 31 ஆம் திகதி வரையில் நீடிப்பதாக நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து ஊரடங்குச் சட்டம் மே மாதம் 31ம் திகதி வரையில் நீடிக்கும் என ஊடகங்கள் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஊரடங்குச் சட்ட அனுமதிப்பத்திர கால வரையறை நீடிப்பானது ஊரடங்குச் சட்டத்தை நீடிப்பதாக அர்த்தப்படாது என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd