பாராளுமன்றத் தேர்தலுக்காக பொறுப்பேற்றுக்கொள்ளப்பட்ட சகல வேட்பு மனுக்களும் காலவதியாகும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல்கள் ஆணைக்குழுவில், கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் சுயேட்சை குழுக்களின் பிரதிநிதிளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, மேற்கண்டவாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
வேட்பு மனுக்கள் பொறுப்பேற்றுக்கொண்ட மார்ச் மாதம் 17,18 மற்றும் 19 ஆம் திகதிளில், அரச பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு, அரச விடுமுறையாக அறிவித்திருந்தமையே இதற்கு காரணமென அறியமுடிகின்றது.
இதுதொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழு சட்டமா அதிபரின் விளக்கத்தையும் கோரியுள்ளது என்று அறியமுடிகின்றது.