கொரோனா தொற்றுக்குள் உள்ளாகாத மாவட்டங்களில், வடமாகாணத்திலிருந்து மூன்று மாவட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் மட்டுமே கொரோனா தொற்று ஏற்படவில்லை.
கொரோனா தொற்று இல்லாமல் இருந்த நான்கு மாவட்டங்களில், நுவரெலியா மாவட்டத்திலும் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர் இனங்காணப்பட்டார்.
இந்நிலையில், கொரோனா தொற்றுக்கு உள்ளாவர்களின் எண்ணிக்கை 705 ஆக அதிகரித்துள்ளது. 182 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.
ஒருவர் மரணமடைந்துள்ளார். கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களில் ஒருவருக்கு மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.