விடுமுறையை நிறைவு செய்து மீண்டும் வெலிசர கடற்படை முகாமுக்கு வருகைத் தந்த நிலையில், கொரோனா தொற்றுள்ளாகியுள்ள கடற்படை வீரரின் வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த, பெண்ணொருவர் இன்று (3) அதிகாலை உயிரிழந்துள்ளார்.
கடந்த 22ஆம் திகதி விடுமுறையில், அரநாயக்க பிரதேசத்திலுள்ள தனது வீட்டுக்கு வருகைத் தந்த குறித்த கடற்படை வீரர், 27ஆம் திகதி மீண்டும் முகாமுக்கு வந்த நிலையில், 28ஆம் திகதி கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து, அவரது வீட்டில் உள்ளவர்கள் சுயதனிமைக்குள்ளாக்கப்பட்ட நிலையிலேயே, அவரது பாட்டி உயிரிழந்துள்ளார்.
இவரது மரணம் தொடர்பான பரிசோதனைகளை சுகாதார தரப்பு முன்னெடுத்து வருவதுடன், இவரது சடலத்தை தனிமைப்படுத்தல் ஒழுங்கு விதிகளுக்கு அமைய தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.