பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் அவர்களை கைதுசெய்தனர். அங்கு பூஜை பொருட்களும் இருந்துள்ளன. அவற்றையும் மீட்ட பொலிஸார், சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த சம்பவம்,தலாவ, இலங்தகஹவெவ பிரதேச்தில் இடம்பெற்றுள்ளது.
கிணறு வெட்டும் நோக்கி, தொல்பொருட்களை அகழ்ந்து கொண்டிருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் தம்புத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.