அலரிமாளிகையில் நாளை (04) நடைபெறவிருக்கும் கலந்துரையாடலில் பங்கேற்பதாக அறிவித்திருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சி, அந்த கூட்டத்தில் பங்கேற்காது என அறிவித்துள்ளது.
ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூடிய, ஐ.தே.க உறுப்பினர்கள் பங்குபற்றிய கூட்டத்திலே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த தலைமையிலான இந்த கூட்டம், அரசியல் உள்நோக்கம் கொண்டது. ஆகையால், அக்கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என அறிவித்துள்ளது.