ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினருக்கு இடையில் நேற்றைய தினம் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களும், ஒன்றிணைந்த எதிரணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களும் சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.
கூட்டணி ஒன்றை அமைப்பதே இந்தச் சந்திப்பின் நோக்கம் என, ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா, தெரிவித்துள்ளார்.