உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் பிரதான சந்தேகநபரான சஹ்ரான் ஹாசிமினின், மற்றுமொரு சகா, கல்பிட்டியில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.
அவர், இனங்களுக்கு இடையில் குரோதங்களை ஏற்படுத்தும் வகையிலான பிரசங்கங்களில் ஈடுபட்டார் மற்றும் ஆயுத பயிற்சியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டார்.
அவர், அரச சார்பற்ற நிறுவனத்தை சேர்ந்தவர் என விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.