முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸவுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் டீல் இருக்கிறது. என ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட முன்னாள் எம்.பி ரவி கருணாநாயக்க குற்றஞ்சாட்டினார்.
அதனால்தான், அவருக்கு எதிர்க்கட்சி அலுவலகம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சி அலுவலகத்தை, சஜித் பிரேமதாஸ தலைமையிலான அணிக்கு எவ்வாறு வழங்கமுடியும் என்றும் ரவி கருணாநாயக்க கேள்வி எழுப்பினார்.
அரசாங்கத்துக்கும் சஜித்துக்கும் இடையிலான டீல் காரணமாகவே, இந்தக் காரியாலயம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் ரவி கருணாநாயக்க மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்.