பாராளுமன்றத்தை கூட்டினால், 100 மீற்றர் தூர இடைவெளியில் எம்.பிக்கள் எவ்வாறு அமர்வார்கள் எனக் கேள்வியெழுப்பிய ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன, மங்கள சமரவீரவுக்கு அதனை செய்யமுடியுமா என வினவினார்.
பாராளுமன்றத்துக்கு 225 பேரையும் மங்கள சமரவீர அழைக்கிறார். அவ்வாறு அழைத்தால் அங்கு 100 மீற்றர் இடைவெளியில் 75 பேர் மட்டுமே அமர முடியுமென தெரிவித்துள்ளார்.
அவரது கருத்து அடங்கிய அந்த வீடியோ, கேலி கிண்டல்கள் செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சமூக இடைவெளியை பேணவேண்டும். அதற்காக 1 மீற்றர் தூர இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என அரசாங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, டெங்கு காய்ச்சல் ஏற்பட்ட போது பல தேர்தல்களை நடத்தமுடியும் என்றால், கொரோனா வைரஸ் தாக்கத்தின் போது, தேர்தலை ஏன் நடத்தமுடியாது என அமைச்சர் பந்துல குணவர்தன கேட்டிருந்தமைக்கு கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.