தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனை மீதான விவாதம் பிற்போடப்பட்டுள்ளது.
இன்று நடத்த திட்டமிடப்பட்டிருந்த குறித்த விவாதம் பிற்போடப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்துள்ளார்.
தேசிய அரசாங்கம் தொடர்பான யோசனை, அண்மையில் சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்லவினால் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.
இந்த தேசிய அரசாங்க யோசனையை இன்றைய தினம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள நேற்றைய தினம் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டடிருந்தது.
ஐக்கிய தேசியக் கட்சியைத் தவிர்ந்த, எதிரணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும், தேசிய அரசாங்க யோசனையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன.
இதனை நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக கொண்டுவரப்படவுள்ளஎஇந்த யோசனையை தோற்கடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க உள்ளதாக ஜே.வி.பியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க கூறியிருந்தார்.