கோடரியால் கொத்தி, தன்னுடைய கணவனை கொலைசெய்தக் குற்றச்சாட்டில், கொலையுண்டவரின் மனைவியை, ஹாலிஎல பொலிஸார், நேற்று (5) காலை கைதுசெய்துள்ளனர்.
ஹாலிஎல நாரங்கல பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையே (வயது 37) இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார்.
கணவனை கொலை செய்துவிட்டு குறித்த பெண், ஹாலிஎல பொலிஸ் நிலையத்தில் ஆஜரானார் என்று தெரியவகிறது.
மேற்படி நபர், தினமும் குடித்துவிட்டு வந்து சண்டையிடுவதுடன், தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் மேற்படி பெண் பொலிஸில் வாக்குமூலமளித்துள்ளார்.
இக்கொலை தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.