கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடமையாற்றிய தாதியொருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதனையடுத்து, அந்த தாதியுடன் இணைந்து பணியாற்றியவர்கள் மற்றும் சேவையாளர்கள், அந்த வாட்டில் இருந்தவர்கள் சகலரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கொழும் தேசிய வைத்தியசாலையில், கட்டணம் செலுத்தும் வார்ட்டில் கடமையாற்றிய தாதிக்கே இவ்வாறு கொரோனா தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 45ஆம் இலக்க வார்ட் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.