web log free
May 09, 2025

ஜூன் 1 பாடசாலை திறக்கப்படாது

 “ஜூன் 1 ஆம் திகதி பாடசாலை திறப்பதற்கு கல்வி அமைச்சு எதுவித தீர்மானமும் மேற்கொள்ளவில்லை” - சில ஊடகங்கள் மேற்கொள்ளும் உண்மையற்ற வெளிப்படுதலை புறக்கணியுங்கள் என கல்வி, விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். 

ஜூன் முதலாம் திகதி தொடக்கம் சில கட்டங்களின் கீழ் பாடசாலைகள் திறக்கப்படுவதற்கு அதிபர் ஆசிரியர் மற்றும் ஏனைய பணியாளர் குழுவினரை மே 11 ஆம் திகதி சேவைக்கு வருகை தருமாறும் முதலில் உயர்தர மற்றும் சாதாரணதர மாணவர்களுக்காகவும் ஜூன் முதலாம் திகதி அளவில் அனைத்து தரங்களில் உள்ள மாணவர்களுக்காவும்  பாடசாலையை திறப்பதற்கு கல்வியமைச்சு திட்டமிட்டுள்ளதாக சில அச்சு ஊடகங்களும் இணையத்தளங்களும் வெளியிட்ட செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். 

கல்வி அமைச்சின் செயலாளர் எந்த ஒரு மாகாண கல்வி பொறுப்பாளருக்கோ  அல்லது வேறு கல்வி நிறுவன தலைவருக்கோ அவ்வித எவ்வித அறிவித்தலையும்  வழங்கவுமில்லை. கோவிட்  19 வைரஸ் பரவலடைய முன்னர் இந்த நாட்டின் முதலாவது நோய் தொற்றுக்கு உள்ளானவர் அடையாளம் காணப்பட்டவுடனே நாட்டின் அனைத்து பாடசாலை மாணவர்களின் வாழ்க்கைகள் சவாலுக்கு உள்ளாவதை தவிர்க்க இலங்கை கல்வி அமைச்சு பாடசாலைகளை மூடி தீர்மானத்தை நடைமுறைப்படுத்தியது.

நாட்டின் பிள்ளைகளின் வாழ்க்கையில் பெறுமதியை உணர்ந்து கொண்டு அவர்களின் உயிர்களை பாதுகாக்கும் பொறுப்பை முதன்மையாகக் கொண்டு அத்தீர்மானத்தை கொண்டவாறே பாடசாலைகள் மீண்டும் திறக்கும் முடிவையும் நடைமுறைப்படுத்தும் என கல்வியமைச்சர ்அறிவித்துள்ளார்.


மீண்டும் பாடசாலை திறக்கப்படுதல் மற்றும் திறக்கப்படும் விதமானது சுகாதார அமைச்சின் அறிவுரை மற்றும் அரசினால் மேற்கொள்ளப்படும் கொள்கை நடைமுறைக்கு அமைவாக தீர்மானிக்கப்படும் எனவும் கல்வி செயலாளரினால் தீர்மானம் நடைமுறைப் படுத்தப்படுவது மாகாண வலய மற்றும் கல்வித் துறையின் ஏனைய நிறுவனங்களின் தலைவர்களை அறியச் செய்யப்பட்டே எனவும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த கல்விச் செயலாளர் தெளிவுபடுத்தினார்.

நாடு என்ற வகையில் மட்டுமன்றி உலகென்ற வகையில் அனைவரும் மிகவும் தீர்மானமிக்கதும் சவாலானதுமான பிரச்சனைக்கு முகம் கொடுத்துள்ள இந்த தருணத்தில் ஒழுக்கத்துக்கு புறம்பானதும் பக்கச் சார்பான விதமானதும் குறுகிய நோக்கத்தை அடைந்து கொள்ளும் எண்ணத்தில் ஊடகத்தை பயன்படுத்தும் சில ஊடகங்கள் மற்றும் இணையத்தள செயற்பாடுகள் தொடர்பாக கல்வி அமைச்சு கடும் விசனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்துக்கொள்கின்றது.

Last modified on Wednesday, 06 May 2020 01:29
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd