மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பொருளாதார ஆலோசகருமான அஜிட் நிவாட் கப்ரால், தன்னுடைய மகன் நீண்ட நாட்களாக நாடுதிரும்பவில்லை. அவரையும் அழைத்து வருவதற்காக ஸ்ரீ லங்கன் விமானம், இலண்டனுக்கு செல்லவில்லை என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அவருடைய மற்றொரு மகனான சத்துர கப்ரால், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நேற்று (5) வந்திறங்கியுள்ளார்.
அவர், கட்டுநாயக்கவிலுள்ள ஆடம்பரமான ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
சத்துர கப்ரால் தன்னுடைய பேஸ்புக்கில் பதிவொன்றை போட்டுள்ளார்.
“தலவத்துகொட- அக்குரகொடவில் உள்ள தனது வீடு எனக்கு தெரியாது. அதனால்தான் ஜெட்விங் ஹோட்டலில் தங்கியிருகின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.